வேலூர்:சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் அகஸ்டின் (60). இவர் அதே பகுதியிலுள்ள ஐ.ஓ.பி வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திலுள்ள சித்த மருத்துவ அலுவலகத்திற்கு வந்துள்ளார். சித்த மருத்துவ அலுவலகத்தின் எதிரே வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனைக் கண்ட அகஸ்டின் கூச்சல் போடவே அலுவலக வாயிலில் பாதுகாப்பில் இருந்த பெண் காவலர்கள் அவர்களை விரட்டினர்.
அப்போது, கொள்ளையர்கள் கையில் இருந்த பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பினர். இதற்கிடையில், ஜீவிதா என்ற பெண் காவலர் கொள்ளையர்களின் ஒருவனிடம் இருந்து செல்போனை பிடுங்கினார். பின்னர், அதனை சத்துவாச்சாரி காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து செல்போனை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். தைரியமாக கொள்ளையனை விரட்டப் பிடிக்க முயற்சித்த காவலர் ஜீவிதாவை பலரும் வெகுவாக பாராட்டினர். பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பிபின் ராவத், 12 பேரின் உடல்களுடன் டெல்லி புறப்பட்ட ராணுவ விமானம்!