வேலூர்: குடியாத்தம் அடுத்த பரதராமியை சேர்ந்த ரவி மற்றும் கோபி ஆகிய இருவரும் சேர்ந்து "பரதராமி ஜான் சீனா" என்ற பெயர் சூட்டப்பட்ட மஞ்சுவிரட்டு ஒத்தை கொம்பு காளை வளர்த்து வந்தனர். இந்த காளை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை குவித்தது.
ஜல்லிக்கட்டில் கொடிகட்டி பறந்த "ஜான் சீனா காளை" உயிரிழந்தது... ஊர்மக்கள் அஞ்சலி... - Horned Bull
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஜல்லிக்கட்டில் கொடிகட்டி பறந்த "ஜான் சீனா காளை" உயிரிழந்தது. அந்த காளையின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Etv Bharat
இந்த நிலையில், இன்று(அக்.01) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. அதன்பின் காளைக்கு இறுதி சடங்குகள் நடந்தன. அப்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் "ஜான் சீனா காளையின்" ரசிகர்களும், ஊர்மக்களும் காளையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்லமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:மின்வேலியில் சிக்கி பலியான சிறுத்தை ; ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் விதி மீறலா...?