தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

12ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது! - வேலூர் போலி மருத்துவர்

வேலூரில் பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி மருத்துவர் கைது
போலி மருத்துவர் கைது

By

Published : Aug 6, 2021, 4:31 PM IST

வேலூர்: குடியாத்தத்தை அடுத்த ஜிட்டப்பள்ளியைச் சேர்ந்த மஸ்தான் (38) என்பவர், முறைப்படி ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்கள், குடியாத்தம் காவல் துறையினர் ஆகியோர் இணைந்து ஜிட்டப்பள்ளியில் இயங்கி வந்த மருத்துவமனையில் சோதனை செய்தனர்.

போலி மருத்துவர் கைது

அப்போது, மஸ்தான், பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி, மாத்திரைகள் கொடுத்து வந்தது தெரியவந்தது.

போலி மருத்துவர் கைது

தொடர்ந்து போலி மருத்துவர் மஸ்தானை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து ஏராளமான ஆங்கில மருந்துகள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:போலி பத்திரம் மூலம் பல கோடி ரூபாய் சொத்துகள் அபகரிப்பு - நாராயணசாமி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details