ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளான தேவராஜபுரம், சாத்கர் ஆகிய மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டுபிடித்து, அவற்றை அழிக்கும் பணியில் காவல் துறையினர் கூட்டாக ஈடுபட்டனர். இந்த கூட்டுச் சோதனையில் மொத்தம் 5,600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
ஆந்திர எல்லையில் 5,600 லிட்டர் கள்ளச்சாராயம் ஒழிப்பு..! - ஆந்திர எல்லையில் 5,600 லிட்டர் கள்ளச்சாராயம் ஒழிப்பு
வேலூர்: மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினர் ஆந்திர மாநில காவல் அதிகாரிகளுடன் இணைந்து கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆந்திர எல்லையில் 5,600 லிட்டர் கள்ளச்சாராயம் ஒழிப்பு
ஆந்திர எல்லையில் 5,600 லிட்டர் கள்ளச்சாராயம் ஒழிப்பு
அதில், குப்பம் காவல் துறையினருடன், வாணியம்பாடி மதுவிலக்கு ஆய்வாளர் இணைந்து, 2600 லிட்டர் சாராயத்தை அழித்தனர். மேலும், குடியாத்தம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தலைமையில், சாத்கர் மலைப்பகுதியில், 3000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர். இது தொடர்பாக ஆந்திர மாநில காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.