தமிழ்நாடு

tamil nadu

ஆற்றுப்படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - வேலூர் ஆட்சியர்

By

Published : Aug 24, 2019, 7:45 PM IST

வேலூர்: ஏரிகள், ஆறுகள், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

மக்கள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. விரைவில் குடிநீர் பற்றாக்குறை நூறு விழுக்காடு தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் குடிமாரமத்துப் பணிகளுக்காக பொறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் வகையில் அதற்கான சர்வே பணிகள் நடைபெற்றுவருகிறது. அது நிறைவடைந்தபிறகு ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

இதையடுத்து அமைச்சர் வீரமணி பேசுகையில். "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் திறமையான ஆட்சி செய்துவருகிறார். அதற்கு உதாரணமாக வேலூரை இரண்டு மாவட்டமாக பிரித்தால் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகைக்கு ஈட்டு செல்லும் என்பதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாகப் அறிவித்தார். மேலும் ஜோலார்பேட்டை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்தார்.

இதில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தாசில்தார் ஆனந்த்கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி. ரமேஷ், வருவாய் துறை அலுவலரகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details