தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநகராட்சி ஆணையரைப் பணியிட மாற்றம் செய்யக்கோரி ஊழியர்கள் போராட்டம் - வேலூர் மாவட்டச்செய்திகள்

வேலூர்: மாநகராட்சியின் ஆணையராக உள்ள சங்கரன் ஊழியர்களை அவதூறாகப் பேசுவதாகவும், அதீத பணிச் சுமை தருவதாகவும் கூறி 200-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

Employees protest demanding transfer of vellore corporation commissioner, மாநகராட்சி ஆணையரை பணியிட மாற்றம் செய்யக்கோரி ஊழியர்கள் போராட்டம், வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், வேலூர், vellore, vellore latest, வேலூர் மாவட்டச்செய்திகள், வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்
employees-protest-demanding-transfer-of-vellore-corporation-commissioner

By

Published : Mar 22, 2021, 2:36 PM IST

வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் வேலூர் மாநகராட்சி அனைத்து அரசு அலுவலர்கள் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று (மார்ச் 22) வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியின் ஆணையராக உள்ள சங்கரன் ஊழியர்களை அவதூறாகப் பேசுவதாகவும், அதீத பணிச்சுமை தருவதாகவும், கடந்த மார்ச் 18 அன்று விபத்தில் உயிரிழந்த மாநகராட்சி வருவாய் உதவியாளர் சதாசிவம் என்பவர் இறப்புக்கு ஆணையரின் அழுத்தமே காரணம் எனக் கூறியும் அவரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரியும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் இறுதியில் மாநகராட்சி ஆணையர் சங்கரன் போராட்டக்காரர்களிடம் தான் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:வேலூரில் தீ பிடித்து எரிந்த ராஜஸ்தான் லாரி!

ABOUT THE AUTHOR

...view details