வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், வாணியம்பாடி பெருமாள் பேட்டை கூட்ரோடு பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர், அவ்வழியாகச் சென்ற வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த தவமணி என்பவர் காரை தணிக்கை செய்தனர். அப்போது, காரில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வைத்திருந்தார்.
உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,40,000 பறிமுதல்! - election-officer-sezied
வேலூர்: வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2,40,000 ரூபாய் பறிமுதல்!
பணத்தைக் கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், அதற்கான ஆவணத்தைச் சமர்ப்பிக்க வலியுறுத்தினர். உரிய ஆவணங்கள் இல்லாததால், அப்பணம் வாணியம்பாடி கருவூலத்தில் வைக்கப்பட்டது. உரிய ஆவணம் சமர்ப்பித்த பின் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.