வேலூர்: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பண கொடுப்பதைத் தடுக்கும் வண்ணம் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வங்கி, ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்வதற்கு முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஏப்.5) வேலூரில் பறக்கும் படையும், நிலை கண்காணிப்பு குழுவும் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டது.
இச்சூழலில் வேலூர் அண்ணா சாலை டோல்கேட் பகுதி அருகே லட்சுமி திரையரங்கம் முன்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே எடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக வந்த இரண்டு தனியார் பணம் நிரப்பும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் முறையாக அனுமதி பெறாமல் 1 கோடியே 46 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது.