தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கடும் நடவடிக்கை பாயும்' - ஒன்றிய செயலாளர்களுக்கு துரைமுருகன் அலெர்ட்! - வேலூரில் திமுக கூட்டம்

வேலூர்: கட்சிப் பணியை முறையாகச் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை பாயும் என திமுகவின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் திமுக கூட்டம்
வேலூரில் திமுக கூட்டம்

By

Published : Feb 25, 2020, 9:45 AM IST

வேலூர் மாவட்ட திமுக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது.

அதில் திமுக பொருளாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். அதில் பேசிய துரைமுருகன், "தற்போது வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.

வேலூரில் திமுக கூட்டம்

இது நமக்கு வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். எனவே அனைவரும் விருப்புவெறுப்பின்றி ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். ஒன்றிய செயலாளர்கள் மாதந்தோறும் கூட்டம் நடத்தி கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதில்லை என சிலர் கூறுகிறார்கள். இனி வரும் மாதங்களில் ஒன்றிய செயலாளர்கள் முறையாகக் கூட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்” என்றார்.

இதையும் படிங்க:

ஜோதிராதித்யா சிந்தியாவுடன் நல்லுறவு தொடர்கிறது - திக் விஜய் சிங்!

ABOUT THE AUTHOR

...view details