வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில்,
என் மகனை தத்து கொடுக்கிறேன்: துரைமுருகன் நெகிழ்ச்சி
வேலூர்: தன் மகனை மக்களிடம் தத்து கொடுக்கிறேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
நான் அண்ணா மற்றும் கலைஞருடன் பல மேடைகளில் பேசியுள்ளேன். கட்சியில் பல மேடைகளில் பல்வேறு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் போது சாதரணமாக பேசிவிடுவேன். இப்பொழுது எனக்கு பிறந்த மகனை மக்களிடம் அறிமுகம் செய்யும்போது சற்று பயமாக இருக்கிறது. நான் என் மகனை இத்தொகுதி மக்களிடம் தத்து கொடுக்கிறேன்.
அவரை நம்பி வாக்களியுங்கள். திமுக வெற்றி பெற்றால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் தோல் தொழிற்சாலையை தவிர்த்து மாபெரும் தொழிற்பேட்டை நிறுவப்படும். நான் என் மகனை இத்தொகுதி மக்களிடம் ஜாமின் கொடுத்து தத்து கொடுக்கின்றேன். மோடி அரசை நாட்டைவிட்டு வெளியேற்ற மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.