தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’திமுக அறிக்கை கதாநாயகன்; அதிமுக அறிக்கை வில்லன்’ - துரைமுருகன்

வேலூர்: சட்டமன்றத் தேர்தலில் 12 ஆவது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட 10 ஆவது முறையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

duraimurugan
duraimurugan

By

Published : Mar 15, 2021, 3:52 PM IST

திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான துரைமுருகன், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, காட்பாடி செங்கோட்டையில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர், சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த துரைமுருகன், அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.‌

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், ”காட்பாடியில் பத்தாவது முறையாக போட்டியிடுகிறேன். இத்தனை முறை என் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது. இத்தேர்தலில் திமுக வெற்றிச் சிறகடிக்கும். எங்களது தேர்தல் அறிக்கை கதாநாயகன் எனும்போது, அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்.

’திமுக அறிக்கை கதாநாயகன்; அதிமுக அறிக்கை வில்லன்’

மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளை குறைவின்றி செய்தால். பன்னிரெண்டாவது என்ன பதினைந்தாவது முறையும் ஏற்றுக்கொள்வார்கள். மக்களுக்கு தொண்டு செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் உள்ளே செல்ல முடியாது. ஆகவே பதவி பெரிதல்ல. மக்களுக்கு தொண்டாற்ற ஒரு நல்ல வாய்ப்பு. நான் அந்த வழியை பின்பற்றுவதால், பன்னிரெண்டாவது முறையாக தோர்தலில் போட்டியிடுகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: 'விரைவில் பாஜகவுக்கு பிரபலங்கள் பரப்புரை செய்வர்': எல்.முருகன்

ABOUT THE AUTHOR

...view details