வேலூர் மாவட்ட சைக்கிள் ஓட்டுவோர் சங்கம் சார்பில் காட்பாடியில் சிறுவர்கள், இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது. மொத்தம் நான்கு பிரிவுகளில் நடந்த இப்போட்டியை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியானது சித்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி இருந்து கார்ணாம்பட்டு வரை மொத்தம் 10 கி.மீட்டர் தொலைவில் நடைபெற்றது. இதற்காக ஆங்காங்கே வழிகளில் தண்ணீர், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் அடுத்து நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.