வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி 153 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா: அமைச்சர் பங்கேற்பு - அமைச்சர் கே.சி வீரமணி பேச்சு
வேலூர்: ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கே.சி. வீரமணி விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிகணினி வழங்கும் விழா
அமைச்சர் கே.சி வீரமணி பேச்சு
பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு அரசு கல்விக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கிறது என்றும், இந்தியாவிலேயே உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றும் பேசினார். இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.