வேலூர்:கரோனா பரவல் தீவிரம் அடைந்ததை அடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு பரோல் அனுமதி மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் உள்ள கைதிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக முன்கூட்டியே கைதிகளிடம் விண்ணப்பம் பெறப்படும். கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் அவர்களுக்குப் பண்டிகை கால பரோல் வழங்கப்படும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பரோலில் செல்வதற்காக ஏராளமான கைதிகள் ஆர்வமுடன் இருந்தனர்.