தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - SC, ST and OBC

வேலூர்: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு பறிப்பதை கண்டித்தும், வங்கி தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இடஒதுக்கீட்டைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இடஒதுக்கீட்டைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 16, 2020, 9:16 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மைய மாவட்டம் சார்பில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், வங்கிகளில் அலுவலர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் சட்டப்பேரவை தொகுதி செயலாளர் விஜயசாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details