வேலூர்:இந்தியாவில் தற்போது வரை 38 பேருககு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர - தமிழ்நாடு எல்லைப் பகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கிரிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒரு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு முன்னெச்சரிக்கை சோதனைகள் ஏதும் தற்போது வரை செய்யப்படவில்லை.