வேலூர் மாவட்டம் குடியாத்தம் சரகுப்பம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி அமராவதி (82). இவருக்கு 4 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். நடராஜன் உயிரோடு இருக்கும் போது தனது நிலத்தை தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
2 ஏக்கர் நிலம் தாய் அமராவதிக்கு இருந்துள்ளது. இந்நிலையில் இவரது இளைய மகன் ரவி என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தை 3 தங்கை மற்றும் தாய்க்கு பிரித்து எழுதி வைப்பதாக பொய் கூறியுள்ளார். பின்னர் தாய், தங்கைகளின் மொத்த சொத்தையும் ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார்.