வேலூர்:வேலூர் மாவட்டம்மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் 2018-19ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்த உமாமகேஸ்வரி (38). இவர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.97 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூபாய் 97 லட்சம் மோசடி கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி பெண் மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண் மேலாளர் கைது
கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், உமாமகேஸ்வரியை வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்றிரவு (மே 31) கைது செய்தனர்.
இதையும் படிங்க:இந்திய கப்பல் படையில் முத்திரைப் பதிக்கும் முதல் படுகர் இனப்பெண்
TAGGED:
மகளிர் சுயஉதவிக்குழு