தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதல்முறையாக திமுகவைப் பாராட்டிய ஹெச். ராஜா - ஏன் தெரியுமா? - சீன அதிபரின் வருகையை மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்

வேலூர்: சீன அதிபரின் வருகையை மு.க.ஸ்டாலின் வரவேற்பதாகக் கூறியது, அக்கட்சி முதிர்ச்சியடைந்ததைக் காட்டுகிறது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

h-raja

By

Published : Oct 9, 2019, 10:14 PM IST

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியானது பாஜக சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது வரவேற்கத்தக்கது.

ஹெச். ராஜா பேட்டி

அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத்' தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ’சீன அதிபரின் வருகையை எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பதாக தெரிவித்திருப்பது ஒரு குழந்தை நாளடைவில் முதிர்ச்சியடைந்து நடப்பது போல, திமுக எழுந்து நடந்து, பழகி தற்போது முதிர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது' என்று குறிப்பிட்ட அவர் அதனை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:பிரதமரும் சீன அதிபரும் கூட்டாக எந்தெந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கிறார்கள் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details