வேலூர்: சென்னையை சேர்ந்த வாசன் என்பவர், சத்துவாச்சாரியில் சொந்தமாக வீடு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீட்டை, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக கவுன்சிலராக இருந்த பாட்சி எனும் ஜெயசங்கருக்கு வாடகைக்கு கொடுத்ததாகவும், ஆனால் ஜெயசங்கர் வீட்டு வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாசன் தனது உறவினர்களுடன், அவரது வீட்டை பார்க்க சென்றபோது, ஜெயசங்கரின் மகனும் தற்போதைய திமுக கவுன்சிலருமான சிதீஷ், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசனின் உறவினர்களை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வாசனின் உறவினர்கள் 7 பேர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.