தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மழை பாதிப்பு; வேலூரில் மத்தியக் குழு ஆய்வு - vellore

வேலூரில் மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது, ஆய்வுப் பணிகள் முழுமையாக முடியவில்லை, ஆய்வு பணிகள் முடிந்த பின்பு முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Central team
Central team

By

Published : Nov 23, 2021, 8:17 PM IST

வேலூர் : வேலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், மத்திய நிதி மற்றும் செலவினங்கள் துறை ஆலோசகர் கவுல், நீர்வள அமைச்சக இயக்குனர் தங்கமணி, ஆகிய 5 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து சேதங்களை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தனர்.

இன்று (நவ.23) மதியம் வேலூர் வந்த மத்திய ஆய்வுக் குழுவினர் தனியார் ஹோட்டலில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாணாடியன் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் காட்பாடியை அடுத்த குகைநல்லூர் கிராமத்தில் விவசாயி பஞ்சதந்திரம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் அளவிலான நெற்பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்பு பொன்னை நீர்த்தேகம் இடத்தை ஆய்வு செய்த பின், மேல்பாடி தரைப்பாலம், பொன்னை தரைப்பாலம் ஆகிய வெள்ளத்தில் சேதமடைந்ததை பகுதிகளை ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில், 524 ஹெக்டர் பயிர்களும், 498 வீடுகளும் சேதமடைந்த இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டது. ஆய்வுக்கு பின் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள், வீடுகள் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்பு போன்ற ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.

ஆய்வுப்பணிகள் முடிந்தபின் வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாக தெரிவிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : புதுச்சேரி வேளாண் துறை இயக்குநரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details