தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2020, 6:16 PM IST

ETV Bharat / city

திமுக நிர்வாகி வீட்டில் சிபிஐ விசாரணை!

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலின்போது 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் இன்று விசாரணை நடத்தினர்.

cbi
cbi

2019 மக்களவைத் தேர்தலின்போது, வேலூர் தொகுதியின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாக திமுக விவசாய அணி அமைப்பாளர், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அது தொடர்பாக மூன்று பிரிவுகளின்கீழ் சிபிஐ வழக்குப்பதிவும் செய்தது. அதன் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கான தேர்தல் அப்போது ரத்துசெய்யப்பட்டு, பின்னர் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வேலூர் பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிற்கு, இன்று சென்னையிலிருந்து வந்த சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். மக்களவைத் தேர்தலின்போது பணம் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அழைப்பாணை வழங்கியுள்ளதாகப் பூஞ்சோலை சீனிவாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுக நிர்வாகி வீட்டில் சிபிஐ விசாரணை!

இதையும் படிங்க: அதிமுக அரசை பாராட்ட பிரதமருக்கு என்ன நிர்பந்தம்? - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details