தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனுமதியின்றி கூட்டம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது வழக்குப்பதிவு - அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

வேலூர்: அனுமதியின்றி தேர்தல் கூட்டம் நடத்தியதாக கே.வி. குப்பம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி உள்பட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன் மூர்த்தி
அதிமுக கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன் மூர்த்தி

By

Published : Mar 15, 2021, 5:15 PM IST

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி போட்டியிடுகிறார்.

இதனிடையே நேற்று முன்தினம் (மார்ச் 13) கே.வி. குப்பம் சந்தைமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூட்டணி கட்சியான பாமக ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் ஜெகன்மூர்த்தி பங்கேற்றுப் பேசினார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி

இந்நிலையில் தேர்தல் விதிமுறைப்படி அனுமதி பெறாமல் நடந்த ஆலோசனைக் கூட்டம் என்பதால் தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி வேலூர் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் விக்னேஷ் கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வேட்பாளர் ஜெகன்மூர்த்தி, தனியார் மண்டப உரிமையாளர் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மீது கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:ஈரோட்டில் மதுபானங்கள் கடத்தலை தடுக்க 40 இடங்களில் சோதனைச்சாவடிகள்

ABOUT THE AUTHOR

...view details