தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விழாவைப் பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்! - வேலூர் உடல் உறுப்புகள் தானம்

திருப்பத்தூர்: எருது முட்டி படுகாயமடைந்து உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

வேலூர் உடல் உறுப்புகள் தானம்
வேலூர் உடல் உறுப்புகள் தானம்

By

Published : Mar 13, 2020, 7:35 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (30). இவர் மார்ச் 10ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே காமாச்சி அம்மன் பேட்டையில் நடைபெற்ற எருது விடும் விழாவை பார்க்கச்சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பந்தயத்தில் பங்கேற்ற எருது முட்டியதில் படுகாயம் அடைந்த குமார், வேலூரிலுள்ள தனியார் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

கொரோனா அச்சுறுத்தல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசு ஆலோசனை?

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் உறவினர்களின் சம்மதத்துடன் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. இதில் சிறுநீரகம், 2 கண்கள் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்த குமாருக்கு திருமணமாகி 4 வயதிலும், ஒரு வயதிலும் இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விழாவைப் பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details