வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியில் இன்று (ஜன. 29) 61ஆம் ஆண்டு ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது.
சென்ற வருடம் கரோனா தொற்றால் தடைசெய்யப்பட்ட எருதுவிடும் விழாவிற்கு இந்த வருடம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 14ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26ஆம் தேதிவரை வேலூர் மாவட்டத்தில் சுமார் 45 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் 5000-க்கும் மேற்பட்டோர் காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியில் குவிந்தனர். 200-க்கும் மேற்பட்ட காளைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து வாடிவாசல் வழியாகச் சீறிப் பாய்ந்து ஓடியது.