வேலூர்: சேம்பேடு கிராமம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன்(31). கடந்த 18ஆம் தேதி கசத்தை அடுத்த உள்ளிபுத்தூர் கூட்ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி, 22.03.2022 அன்று மாலை மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இறந்தும் வாழும் இளைஞர் - சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! - வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனை
வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பலன் இன்றி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கலையரசன்
இதைத்தொடர்ந்து, அவரது உறவினர்கள் கலையரசனின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி இவருடைய இதயத்தின் வால்வுகள் போர்டிஸ் லைஃப் லைன் மருத்துவமனைக்கும், கல்லீரல் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனைக்கும், இவருடைய சிறுநீரகங்கள் மற்றும் கண் ஆகியவை மற்ற மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பைக் ரேஸ் செய்து அட்டூழியம்: காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 5 பேர் கைது