தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பல்வேறு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 103ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதத்தில் அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Best celebrated MGR birthday party in various places
Best celebrated MGR birthday party in various places

By

Published : Jan 18, 2020, 11:30 AM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள்விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அரியலூர்:

இதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசினுடைய தலைமை கொறடாவான தாமரை ராஜேந்திரன் பேரணியாகச் சென்று பேருந்துநிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனையடுத்து பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நாமக்கல்:


இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில், அம்மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அதன்பின் பெண்கள் பொங்கல் வைத்து எம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

புதுக்கோட்டை:


எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட பழைய பேருந்துநிலையத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் மாலையணிவித்து மறியாதை செய்தார். இவ்விழாவில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர்:


திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு அமமுக கட்சியினர், எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அமமுக கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய கட்சியினர்

ABOUT THE AUTHOR

...view details