தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள்..! வணிகர் சங்கத்தினர் முற்றுகை..! - in vellore vaniyambadi

வேலூர்: வாணியம்பாடியில் உள்ள மளிகைக் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து, வணிகர் சங்கத்தினர் சிலர் கடையை முற்றுகையிட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

By

Published : Aug 15, 2019, 10:08 PM IST

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மளிகைக் கடையில், சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாகக் கூறி வணிகர் சங்கத்தினர் சிலர், தனியார் மளிகைக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் கடையின் கிடங்குக்கு சென்று பார்த்த வணிகர் சங்கத்தினர், அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்ததாகத் தெரிகிறது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்த வணிகர் சங்கத்தினர்

இதனையடுத்து, அம்மளிகைக் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வணிகர் சங்கத்தினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பின், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details