வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவ்வேளையில் அவருடன் பணியாற்றிய காவலர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
4 காவலர்களுக்கு கரோனா - பாகாயம் காவல் நிலையம் மூடல்! - வேலூர் கொரோனா
வேலூர்: நான்கு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாகாயம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
![4 காவலர்களுக்கு கரோனா - பாகாயம் காவல் நிலையம் மூடல்! வேலூர் கொரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:00-tn-tpt-06-bagayam-police-station-closed-vis-scr-pic-tn10018-17062020225452-1706f-1592414692-864.jpg)
வேலூர் கொரோனா
அதில் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாகாயம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இக்காவல் நிலைய எல்லைக்குட்பட்டவர்கள் அரியூர் காவல் நிலையத்தில் புகார் மனுக்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரையில் எட்டு காவலர்கள் உள்பட மொத்தம் 294 பேர் பாதிக்கப்பட்டு, 58 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.