வேலூர்: ஆவின் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராகப் பணியாற்றி வருபவர், மகேந்திரமால் (57).
இவர் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான காசோலையை அனுமதிப்பதற்கு, லஞ்சம் வாங்குவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள்
இந்நிலையில், ஜெயச்சந்திரன் என்ற ஒப்பந்த ஊழியரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினர். இதனையடுத்து, ஒப்பந்த ஊழியர் ஜெயச்சந்திரன் இன்று நவ.09 ஆம் தேதி, உதவி பொது மேலாளர் மகேந்திரமாலிடம் காசோலையை அனுமதிப்பதற்காக, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் மகேந்திரமாலை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மகேந்திரமாலிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு - நீதிமன்றம் செய்தது என்ன தெரியுமா?