தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுபோதையில் தகராறு! - ராணுவ வீரர் குத்திக்கொலை! - மதுபோதையில் தகராறு

வேலூர்: மது போதையில் ஏற்பட்ட மோதலால் ராணுவ வீரர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

personnel
personnel

By

Published : Dec 19, 2020, 1:52 PM IST

காட்பாடியை அடுத்த ஜாப்ரா பேட்டையை சேர்ந்த யோகராஜ் (23), தீபக் (23) ஆகிய இருவரும் லடாக் எல்லையில் இராணுவ வீரர்களாக பணியாற்றி வருகின்றனர். யோகராஜ் கடந்த 2 ஆம் தேதியும், தீபக் 9 ஆம் தேதியும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், யோகராஜின் பிறந்தநாளையொட்டி நேற்று (டிச. 18) தீபக் மற்றும் அவரது நண்பர் நேதாஜி ஆகிய மூவரும் நள்ளிரவு கழிஞ்சூர் ரயில்வே கேட் அருகே மது அருந்தி விட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது வேறொரு கும்பலைச் சேர்ந்த ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது போதையில் இருந்த யோகராஜ், அவர்களது வண்டியை பார்த்து திருட்டு வண்டியா என்று கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றவே, கையில் வைத்திருந்த கூரான ஆயுதத்தை கொண்டு யோகராஜ் மற்றும் தீபக் ஆகியோரை அக்கும்பல் சரமாரியாக குத்தியுள்ளது.

இதில் இராணுவ வீரர் யோகராஜ் பலத்த காயத்துடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், பலனின்றி இன்று உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தீபக் மற்றும் நேதாஜி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட யோகராஜின் உடல், கூராய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அங்கோடா லொக்கா பெற்றோரின் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details