தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு- பாஜக, விசிக மோதல் - பாஜக விசிக மோதல்

வேலூர் அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விசிகவினர் தடுத்தி நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு- பாஜக, விசிக மோதல்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு- பாஜக, விசிக மோதல்

By

Published : Jul 24, 2022, 10:11 AM IST

வேலூர்:வேலூர் மாநகர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று (ஜூலை 23) மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தி சிலையை பூட்டிவிட்டு பாஜகவினரை திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.

இதனால், இரு கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பையும் சாமாதனப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு- பாஜக, விசிக மோதல்

காந்தி நகர் பகுதியை சேர்ந்த இருவர் பாஜகவில் இணைந்துள்ளதால், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பொது சிலை அல்ல, தாங்கள் வைத்த சிலை என விசிக தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:'மின்கட்டண உயர்வில் பாஜகவும், திமுகவும் நாடகமாடுகிறது' - சீமான்

ABOUT THE AUTHOR

...view details