ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர்களின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர். மேலும் படுகாயம் அடைத்தவர்களை மீட்ட காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து; 25 பேர் படுகாயம்! - அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
வேலூர்: சோலூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பயணிகள் படுகாயமடைந்தனர்.
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 25 பேர் படுகாயம்!
மேலும் தலைகுப்புற கவிழ்ந்ததில் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்தது, துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் அதை சரி செய்தனர். சிறுகாயமடைந்த சிலர் மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.