வேலூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த மாதனூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கைதிகளை சிறையில் ஒப்படைக்க வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவேயுள்ள தடுப்பு கம்பிகளின் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... 4 பேர் படுகாயம் - car accident
வேலூர்: தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துகுள்ளானதில் காவல் துறை ஆய்வாளர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து
இதில் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், ஓட்டுநர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இவ்விபத்தில் கைதிகள் உட்பட மொத்தம் நான்கு பேர் காயம் அடைந்தனர்.