தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ் - குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

வேலூரில் தண்ணீர் கேட்பது போல் நடித்து 15 வயது சிறுமியை தாக்கி பாலியல் வன்புணர்வு செய்தவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்
குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

By

Published : Aug 18, 2021, 10:53 PM IST

Updated : Aug 19, 2021, 8:57 AM IST

வேலூர்:சைதாப்பேட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் காலித் அஹமத் என்ற பாபுல் (40). கட்டடத் தொழிலாளியான இவர், ஜூலை 27ஆம் தேதி இரவு குடிபோதையில் ஒரு வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வன்புணர்வு

அந்த சிறுமி தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது சிறுமியை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். பிறகு திடீரென சிறுமியை தாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து அச்சிறுமி சத்தமிட்டதால் பாபுல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து சிறுமி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் பாபுள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

இந்நிலையில் பாபுல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து, பாபுல் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:சிறுமியை கர்ப்பமாக்கிய மாமனார் - 8 பேர் மீது போக்சோ வழக்கு

Last Updated : Aug 19, 2021, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details