தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களுக்கு 100 விழுக்காடு இலவச மருத்துவம்! - ஏ.சி. சண்முகம் உறுதி - ac shanmugam

வேலூர்: மக்களுக்கு நூறு விழுக்காடு இலவச மருத்துவம் அளித்து வேலூர் நோயில்லா மாவட்டமாக மாற்றப்படும் என அத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வாக்குறுதியளித்தார்.

ஏ.சி.சண்முகம்

By

Published : Jul 22, 2019, 7:49 AM IST

வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவரான ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தேர்தலையொட்டி ஏ.சி. சண்முகம் வாணியம்பாடி பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு ஆதரவாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் வாக்குச் சேகரித்தனர்.

ஏ.சி.சண்முகம் பரப்புரை

பரப்புரையின்போது, மக்களிடையே பேசிய ஏ.சி. சண்முகம், "வேலூர் மாவட்ட மக்களுக்கு நூறு விழுக்காடு இலவச மருத்துவம் அளித்து நோயில்லா மாவட்டமாக மாற்றப்படும். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details