தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காணாமல் போன பள்ளி மாணவி; இளைஞருடன் மீட்பு! - பாய்ந்தது போக்சோ - rapist arrested in pocso

வேலூர்: ஆம்பூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், இளைஞரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

rapist

By

Published : Oct 4, 2019, 1:32 PM IST

வேலூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முனிசாமி - மணி தம்பதியரின் மகள் நிஷாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கரும்பூர் பகுதியிலுள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னர், அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால், ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறை காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: லலிதா நகைக்கடையில் திருடியவர் கைது..

இந்நிலையில், நேற்று ஆம்பூரிலிருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில், பாலூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன மாணவியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர், அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இளம்பெண்ணைக் கடத்திச் சென்றது அந்த நபர் தான் என்பதும், அவர் பாலூர் பகுதியைச் சேர்ந்த கலை நேசன் மகன் பூவரசன் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், பள்ளி மாணவியை கலைநேசன் பாலியல் வன்புணர்வு செய்ததைத் தெரிந்துகொண்டனர். இவ்வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் பூவரசனை கைது செய்து, ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு, அதன்பின் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details