வேலூர்:அணைக்கட்டு அருகே முறையே 41, 34 வயதுடைய கணவன்-மனைவி வசித்துவருகின்றனர். இத்தம்பதியின் மகள் (சிறுமி) எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். சிறுமியின் தந்தை விவசாயி.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தந்தை தனது மகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதனை யாரிடமாவது கூறினால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.
ஒருகட்டத்தில், சிறுமியின் தாய் இதைப் பற்றி அறிந்துகொண்ட பின்னர், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறுமியின் தந்தையைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.