வேலூர்: வேலூர் மாவட்டத்தை பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). இவர் இசை கச்சேரி குழுவை நடத்தி வருகிறார். இவருக்கு மேரி என்பவருடன் திருமணமாகி 2 பெண் மற்றும் ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. பொன்னை பகுதியிலேயே, மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து ராஜா, சித்ராவுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து, திருமணத்தை மீறிய உறவில் இருந்த சித்ராவுக்கும், ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எந்த ஒரு முடிவிற்கும் தற்கொலை தீர்வல்ல குழந்தைகளையும், மனைவியையும் சித்ராவுக்காக விட்டுவந்ததை எண்ணி ராஜா மனமுடைந்துள்ளார். இதனால், ஒரு அறையில் படுத்திருந்த சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மற்றொரு அறையில் தற்கொலைக்கு தயாராகியுள்ளார். இதை அனைத்தையும் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். மேலும், ராஜா சம்பவ இடத்தில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
அவர் தற்கொலை செய்து கொல்வது முழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ராஜா தற்கொலை செய்துகொண்டதை தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சியடைந்து அவரை கட்டித்தழுவி அழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருச்செந்தூர் ஆவணி திருவிழா...வெள்ளி யானை வாகனத்தில் காட்சியளித்த முருகன்