வேலூர்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பள்ளிகொண்டா வழியாக அதிகளவில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு(NCB) தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து வந்த லாரியில் சோதனை நடத்தப்பட்டது. அதில், நிலக்கடலை மூட்டைகளுடன் கஞ்சா பொட்டலங்களும் இருந்தன. உடனே அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் இருவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.