வாகனசோதனையின்போது சிக்கிய 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - லாரி ஓட்டுநர் கைது! - வாகன சோதனையின்போது 16டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேலூர்: பள்ளிகொண்டா பகுதியில் வாகனசோதனையின்போது சிக்கிய 16 டன் ரேஷன் அரிசியை லாரியில் கடத்தமுயன்ற நபரை உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்குப் புகார் வந்தது. அதனடிப்படையில் ஆட்சியரின் வழிகாட்டுதலின்பேரில், வேலூர் மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர், பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன் ஆகியோர் அடங்கியக் குழு, வேலூர் பள்ளிகொண்டா சர்வீஸ் சாலையில் இன்று (பிப். 12) நள்ளிரவு 1 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து சித்தூர் நோக்கிச்சென்ற தமிழ்நாடு பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சுமார் 16 டன் அளவிலான ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையினர், திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் என்பரைக் கைதுசெய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல்செய்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட 16 டன் ரேஷன் அரிசியை தொரப்பாடியில் உள்ள அரசு தானியக்கிடங்கில் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தலையின்றி பைக் ஓட்டி போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு!