வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜெய் இந்திரா நகர் வீரசிவாஜி தெருவில் வசிப்பவர் விஜயகுமார் (40). நகை வேலை செய்யும் இவர் வீட்டிலேயே அடகு கடை வைத்திருக்கிறார். விஜயகுமார் தனது குடும்பத்துடன் 2 நாள்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று காலை திரும்பி வந்து பார்க்கும்போது தனது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அடகு கடை உரிமையாளரின் வீட்டில் 30 சவரன் தங்க நகை திருட்டு - அடகு கடை நடத்தி வருபவர்
வேலூர்: குடியாத்தத்தில் அடகு கடை நடத்தி வருபவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி நகைகளை அதே பகுதியை சேர்ந்த நபர் திருடியது விசாரணையில் தெரியவந்தது.
வீட்டின் உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு 95 ஆயிரம் ரொக்கப் பணம், 30 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்க பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து விஜயகுமார் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அடகு கடை உரிமையாளர் விஜயகுமார் 2 நாள் வேலூருக்கு சென்றிருந்ததை அறிந்த அதே தெருவை சேர்ந்த அருண்குமார் என்ற நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. பின்னர் அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.