தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விருப்பம் இருந்தால் இந்தி கற்கலாம்- நயினார் நாகேந்திரன் - You can learn Hindi if you want

விருப்பம் இருந்தால் இந்தி கற்கலாம் என மத்திய அரசு தெளிவாக கூறிவருகிறது என்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் திருச்சி வருகை
நயினார் நாகேந்திரன் திருச்சி வருகை

By

Published : Apr 14, 2022, 9:39 AM IST

திருச்சி:கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுளுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் இன்னும் 4 மாதங்களுக்கு மத்திய அரசு சார்பில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திருச்சி வந்தார்.

நயினார் நாகேந்திரன் திருச்சி வருகை

அப்போது அவர், "இந்தியை விருப்பம் இருந்தால் மட்டுமே கற்கலாம் என்று மத்திய அரசு தெளிவாக கூறிவருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சிலர் இதை வைத்து அரசியல் செய்கின்றனர்" என்றார்.

நயினார் நாகேந்திரன் இப்படி அதிரடி காட்டியது ஏனோ எனக் கேள்விகள் எழுந்தாலும், அவருக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்து அசத்தினர் உள்ளூர் பாஜகவினர். இந்நிகழ்ச்சியில் அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட பாஜ தலைவர் ராஜசேகர், முன்னாள் தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:இந்தி திணிப்பை தமிழக பாஜக எந்தவிதத்திலும் ஏற்காது... தமிழால் தான் நமக்கு பெருமை' - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details