தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகளிர் தினத்தில் முத்தான மூன்று பெண்மணிகள்... - சர்வதேச மகளிர் தின விழா

மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பல்வேறு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் என்று அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், இங்கு மூன்று பெண் ஆளுமைகள் குறித்துக் காணலாம்.

மகளிர் தினம்
மகளிர் தினம்

By

Published : Mar 8, 2022, 10:38 PM IST

உலவில் ஒவ்வொரு மாதமும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்தததே, இது சமூக அரசியல் பொருளாதார தளங்களில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் எதிர்கால நிகழ்கால நோக்கங்களை சாதனைகளையும் தற்கால மற்றும் எதிர்கால சந்ததிக்கு எடுத்துக்கூறும் தினமாக அமைகின்றது.

வரலாற்றில் பெண்கள் தினம்

உலகில் புரட்சிகர சிந்தனைகள் தோற்றம் கண்ட 1900களின் ஆரம்பத்திலேயே சர்வதேச பெண்கள்தினம் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்டது, உலகில் தொழிற்சாலைகளின் விரிவாக்கம் இதில் தங்களை இணைத்துக் கொள்ளப்பட்ட பெரும்பாலான பெண்கள் அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட அடக்கு முறைகளுடன் கூடிய ஊதியங்கள், சாதி வெறி, அடக்குமுறை, ஆண் ஆதிக்கம், முதலாளித்துவத்தின் பெண் சித்திரவதை , பாலியல் தேவைக்கு அடிமையாக்குதல், காரணமேயின்றி பனிநீக்கம் போன்ற பல காரணங்களால் புரட்சியாக வெடித்தது.

இதன் அடையாளமாக பெண்கள் கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினர். உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான ஒரு தினம் சர்வதேச அளவில் தேவையென கருதி 1910ல் ”கொப்பன்ஹேகன்” நகரில் கூடி சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஒரு யோசனையினை முன்வைத்தார். இங்குதான் 'சர்வதேச பெண்கள் தினம்' உதயமானது.

பாரதியாரின் வரிகள்

இந்த வரலாற்று தீர்மானத்தினை தொடர்ந்து 1911ஆம் ஆண்டு மார்ச் 19இல் முதலாவது சர்வதேச பெண்கள் தினம் ஜரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் உலகளவில் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ”வீட்டிற்குள் பெண்ணை பூட்டி வைத்த விந்தை மானிடர் தலைகுனிந்தார்”‘ என கவிபாடிய பாரதியாரின் கனவுகள் இன்று நனவாகி உள்ளது. தமிழகத்தைச்சார்ந்த சில பெண்மணிகளைப்பற்றி பார்ப்போமா...


செல்வி ஜெயலலிதா:தமிழகத்தில் இவரின் பெயர் இல்லாமல் அரசியல் இல்லை என்றே சொல்ல வேண்டும், அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இவர்களின் மூதாதையர்கள், ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவரது தந்தை ஜெயராம் காலமானார்.

அதன்பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த, ஜெயலலிதாவின் தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூருவில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

சென்னைக்கு வந்த பின்னர், 1958ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரசன்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அரசியல் பிரவேசம்..

திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எம்.ஜி.ஆரின் நட்பு கிடைத்தது. அது அரசியலுக்கு அழைத்து வந்தது. முதன்முதலில் மக்களவை பிரவேசத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185ஆவது இருக்கை அளிக்கப்பட்டது.

அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை திமுக. நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கா. ந. அண்ணாதுரை அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெயலலிதாவின் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர்.

புரட்சித் தலைவி

1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோரு இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.

இறக்கும் வரையில் முதலமைச்சராகப் பணியாற்றினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை "புரட்சித் தலைவி" எனவும் "அம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர். தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபை மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவைச் சார்ந்த முதல் பெண் ஜெயலலிதா. ரஜினிகாந்தால் 'தைரிய லட்சுமி' எனவும் பாராட்டுப்பெற்றவர்.

1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு, இதுவரை நடந்த 10 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த நால்வரில், முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு எதிராக ரூபாய் 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

தமிழச்சி தங்கபாண்டியன்: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகளும், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சரான தங்கம் தென்னரசின் அக்காவாகவும் அறியப்பட்டவர்.

சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவரது கணவர் காவல்துறை அலுவலர் சந்திரசேகர் ஆவார்.

இவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர். இளவயதில் பரதநாட்டியம் கற்றவ தமிழச்சி 2007ஆம் ஆண்டே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு ஒரு மாமாங்கத்துக்குப்பின் 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெ. ஜெயவர்தனை 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

புத்தகப்புழு...

எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, மஞ்சனத்தி , அருகன் அவளுக்கு வெயில் என்று பெயர் எனும் கவிதை தொகுப்புக்கு சொந்தக்காரர்.
பாம்படம், சொல் தொடும் தூரம் , மயிலிறகு மனசு, மண்வாசம் , நவீனத்துவவாதி கம்பன், உறவுகள், பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை, சொட்டாங்கல் ஆகிய கட்டுரை தொகுப்புகளால் வாசகர்களை கட்டிப்போட்டவர். ஆங்கில நூல்களையும் விட்டுவைக்கவில்லை Island to Island (The Voice of Sri Lankan Australian Playwright-Ernest Thalayasingham Macintyre) (Jan 2013) Internal Colloquies, translated by C.T.Indra of selected poems from Vanapechi by Dr.Thamizhachi Thangapandian (Feb 2019) ஆகியவையும் இவரின் படைப்புக்கள்தான். இவரின் விமர்சனம் நிதர்சனம்.. காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம், காற்று கொணர்ந்த கடிதங்கள் ஆகியவை மிக பிரபலமானவை.

இவர், தனக்கு பிறர் எழுதிய கடிதங்களைத் தொகுத்து காற்று கொணர்ந்த கடிதங்கள் என்னும் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். முத்தாய்ப்பாக ஒரு விஷயம் கூறவேண்டும் என்றால் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இவர் தந்தையின் வளர்ப்பு தந்தை எனவே கூறலாம். இதற்காக, அழகிரி எந்த ஊரில் இருந்தாலும் தங்கபாண்டியன் மறைவுநாளில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் வாஞ்சையோடு அண்ணா என்று அழைப்பவர்களில் முக்கியமானவர், அஞ்சா நெஞ்சன்.

ரேவதி சண்முகம்:இன்றைய கலாசாரத்தில் ஒவ்வொரு உடல் உபாதைகளுக்கும் ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால், அந்த காலத்தில் ஊருக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உண்டு. அவர்தான் சகலமும் மருத்துவரைப்போலவே மனதை வருடி நம்மை தாலாட்டிய கவிப்பேரரசு கண்ணதாசன், அந்த கண்ணதாசன் நமது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தார் என்றால் அவரோடைய மகள் நம் நாக்கை கட்டிப்போடுகிறார் என்றே சொல்லலாம். நமது இந்தியப் பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

‘சமையல் திலகம்’ எனும் ரேவதி சண்முகம்

அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. வட இந்தியர்கள், ஏன் வெளிநாட்டுப் பயணிகளேகூட தமிழகம் வரும்போது இட்லி- சட்னி, சாம்பாரை சுவைக்காமல் செல்வதில்லை.

மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இட்லிக்கு என்றே தனிக் கடைகள் இயங்குவதுகூட பேறு பெற்ற இட்லியின் வான் அளாவிய பெருமைக்கு சாட்சி. இட்லியைக் கண்டுபிடித்தது நம்மவர்களே என்று நினைவுகூறி பூரிப்பு கொண்டு புலங்காகிதம் அடைவோம்.

அப்படிப்பட்ட சமையல் துறையில் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனித்தனி இணைப்பாக வழங்கி வருவதோடு மாணவிகளுக்கு சமையல் கலைகளைக்கற்றுக்கொடுத்து வருகிறார்.

வி.ஐ.பி முதல் வி.வி.ஐ.பி வீடுகள் வரை இவரோட கைப்பக்குவம் செல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஒருமுறை அவரோடு பேசும் வாய்ப்பு கிட்டியது அப்போது “என்னோட 24 வயசுலேயே அப்பா இறந்துட்டதால, அப்போ அவரோட புகழும் அருமையும் எனக்கு முழுசா தெரியலை. இப்போ அதெல்லாம் தெரிஞ்சு தினமும் பெருமைப்பட்டாலும் அப்பா உடன் இல்லை.." என்று நெகிழ்ச்சியாகக் கூறி கண்ணீர் சிந்தினார், கவியரசுவின் மகள் ரேவதி சண்முகம்.

இதையும் படிங்க: நன்றி மறவா தமிழன்; உணவின்றித்தவிப்பவர்களுக்கு உதவ ரூ.25,000 நிதி வழங்கிய நாடு திரும்பிய மாணவர்!

ABOUT THE AUTHOR

...view details