திருச்சி மாவட்டம், கண்ணூத்து பகுதியில் உள்ள காட்டெருமை உள்ளிட்ட வன விலங்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் வனப்பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கண்ணூத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவருக்குச் சொந்தமான 50 அடி ஆழக் கிணற்றில் நேற்று முன்தினம் (மே 31) இரவு இரண்டு காட்டெருமைக் கன்றுகள் தவறி விழுந்தன.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், மாவட்ட உதவி வன அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான வனத் துறையினர் கயிறு கட்டி காட்டெருமைக் கன்றுகளை மீட்க முயன்று வந்தனர். ஆனால், கன்றுகளின் அவற்றை சீற்றத்தால் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.