திருச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.