திருச்சி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமை வகித்தார்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு: விசிகவினர் ஆர்ப்பாட்டம் - பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க விசிக போராட்டம்
திருச்சி: மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Vck protest for reservation for OBC students in medicine
நிர்வாகிகள் சந்தனமொழி, சிவதண்டபாணி, தில்லை சரவணன், அன்பரசு, காந்தி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிர்வாகிகள் மாநில அரசு, சுஜா அருள், ஆகியோர் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
TAGGED:
trichy vck protest