திருச்சி:திருவெறும்பூர் அருகே நவல்பட்டு, அண்ணாநகர் சிலோன் காலனியில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் எல்லை முனி ஆண்டவர், வழிவிடு பிள்ளையார் ஆலயங்களும் உள்ளன. இந்தக் கோயில் திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 3ஆம் தேதி கோ பூஜையும் போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகர் கோயில் இருந்து பூத்தட்டு எடுத்து வருதல் நிகழ்வு நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி ஞான விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் தீர்த்தக்குடம் எடுத்து வந்துஅம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், திருத்தேர் வீதி உலா 5ஆம் தேதியான நேற்று முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
தீமிதி திருவிழாவில் நெருப்பில் விழுந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் மகா மாரியம்மன் கோயில் முன்பு மூட்டப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஜூன் 6) அம்மனுக்கு கஞ்சி காய்ச்சும் நிகழ்ச்சியும் அதன் பிறகு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து முன்னதாக அதிகாலை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் அதேப் பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற 70 வயது மூதாட்டிதீ குண்டத்தில் இறங்கியபொழுது, தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அரசுப்பள்ளியின் வசதிகள், அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தல்!