திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான உத்தமர் கோயில் பெருமாள் சித்திரை தேர்த் திருவிழாவின் நான்காம் நாளான புருஷோத்தம பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இத்தலத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளது. முன்னதாக கோயில் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாதாரனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து புருஷோத்தம பெருமாள் வீதி உலா வந்து மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.