திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே செங்குடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சத்யா(13). இவர்களின் உறவினர் வரதராஜ் என்பவரின் மகள் தனுஷ்கா(14). இவர்கள் இருவரும் திருவெள்ளறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7,8ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்.24) விடுமுறை என்பதால் அருகில் உள்ள சிங்க குளத்தில் பள்ளி சீருடையை துவைத்து விட்டு குளித்து வர சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் மாணவிகள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் குளத்து பகுதிக்கு சென்று தேடி உள்ளனர்.
அங்கு இருவரும் இல்லாததால், சந்தேகம் அதிகரிக்க, குளத்துக்குள் குதித்து அப்பகுதியினர் தேடியுள்ளனர். அப்போது குளத்தில் இருந்து இரண்டு மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து, மண்ணச்சநல்லுார் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், மாணவிகளின் உடல்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:முகமூடி அணிந்து பட்டப்பகலில் படுகொலை செய்த மூன்று பேர் : காவல்துறை விசாரணை